விஷால் படத்தை இயக்கும் காக்கி சட்டை இயக்குநர்

Bookmark and Share

விஷால் படத்தை இயக்கும் காக்கி சட்டை இயக்குநர்

இளம் இயக்குநர்களில் துரை செந்தில்குமார் அதிர்ஷ்டக்காரர்தான். சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து தனுஷ் படம் தயாரிக்க எண்ணியபோது துரை செந்தில்குமாரை இயக்குநராக தேர்வு செய்தார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படம் வணிகரீதியில் வெற்றியடைந்ததது. எனவே, அதே காம்பினேஷனில் அடுத்தப் படத்தை தயாரிக்கவும் முன் வந்தார் தனுஷ்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இரண்டாவதுமுறையாக இணைந்த காக்கி சட்டை படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.  காக்கி சட்டை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதேநேரம், காமெடி ஹீரோ என்ற இமேஜ் உள்ள சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக ஆக்ஷன் கேரக்டரில் நடித்திருப்பதால் காக்கி சட்டை படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகமும் உள்ளது.

காக்கி சட்டை வெற்றிபெறுகிறதோ இல்லையோ...துரை செந்தில்குமாருக்கு அடுத்தப்படம் கிடைத்துவிட்டது. பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில், விஷால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் துரை செந்தில்குமார். இந்தப்படத்தை இயக்க பெரிய சம்பளம் வாங்கி இருக்கிறாராம் துரை செந்தில்குமார்.


Post your comment





Related News
தனுஷ் படத்திற்கு நிகராக காக்கிசட்டை முதல் நாள் வசூல்! முழு விவரம்
அதிக எதிர்பார்ப்பில் \'காக்சி சட்டை\'... ?
2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் காக்கி சட்டை
கள்ளபடத்தின் இசையை வெளியிட்டார் விஷால்
காக்கி சட்டை டைட்டிலுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?: இயக்குனர் விளக்கம்
கோவை ஏரியாவில் 50 திரையரங்குகளில் காக்கி சட்டை
\'என்னை அறிந்தால் - காக்கி சட்டை\' ஒரே கதையா...?
காக்கிச்சட்டை: சிவகார்த்திகேயன் காமெடி போலீஸா இல்லை சிங்கமா?
சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை பிப்.27-ல் வெளியாகிறது
\'காக்கிச் சட்டை\'க்காக ஆர்.எம்.வீக்கு தனுஷ் கொடுத்த ரூ 25 லட்சம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions