முதல் மந்திரி பினராய் விஜயனுடன் கலாபவன் மணி குடும்பத்தினர் சந்திப்பு

Bookmark and Share

முதல் மந்திரி பினராய் விஜயனுடன் கலாபவன் மணி குடும்பத்தினர் சந்திப்பு

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த கலாபவன் மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

அவரது உடலில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதனால் அவரை யாரோ வேண்டுமென்று விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பினராய் விஜயன் முதல்–மந்திரியாக பொறுப் பேற்றுள்ளார்.

இவரை நேற்று கலாபவன் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி. ராமகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் திருவனந்தபுரத்தில் சந்தித்தனர். அப்போது கலாபவன் மணி மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.

மேலும் கடந்த 2 மாதங்களாக கேரள போலீசார் கலாபவன் மணி மரணம் குறித்து நடத்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றும், அவரது உடலில் கலந்திருந்த விஷம் குறித்து எழுந்த சந்தேகம் குறித்து அது தொடர்புடையவர்களிடம் விரிவான விசாரணை எதுவும் நடத்தவில்லை என்று குறைபட்டுக் கொண்டனர்.

கேரள போலீசாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் இந்த மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக அவர்கள் முதல்–மந்திரி பினராய் விஜயனிடம் மனுவும் அளித்தனர்.

அதன் பின்னர் அவர்கள் பிற்பட்டோர் நலத்துறை மந்திரி ஏ.கே. பாலனையும் சந்தித்து தனியாக புகார் மனு கொடுத்தனர். 

 


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions