நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் நீடிப்பு!

Bookmark and Share

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் நீடிப்பு!

பிரபல நடிகர் கலாபவன் மணி உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், கடந்த 6-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் இருந்ததாக அவரை பரிசோதனை செய்த மருத்துவமனை டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து அவருடைய உடல் உள்ளுறுப்புகள் கொச்சியில் உள்ள மண்டல ரசாயன பரிசோதனை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை ஆய்வு செய்தபோது அதில் ‘குளோர்பைரிபோஸ்’ என்னும் பூச்சிக் கொல்லி மருந்து (கொடிய விஷம்) இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனால் கலாபவன் மணிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருக்கலாம் என்று அவருடைய குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் கலாபவன் மணியின் மரணம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவரும், குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டுமான பி.என். உன்னி ராஜன், கலாபவன் மணி தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படும் சாலக்குடியில் உள்ள அவருடைய அவுட்ஹவுசுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம், ‘‘இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை கண்டுபிடிக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகிறோம். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இந்த வழக்கு தொடர்புடைய தகவல்களை இப்போதைக்கு தெரிவிக்க இயலாது’’ என்றார்.

இதற்கிடையே மாநில பா.ஜனதா தலைவர் கும்மணம் ராஜசேகரன் நேற்று கலாபவன் மணியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மணியின் மரணம் நடந்து வெகு நாட்களாகியும் போலீசாரால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. எனவே இந்த மரணம் குறித்து நீடிக்கும் மர்மத்தை முடிவுக்கு கொண்டு வர, தேவைப்படும் பட்சத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions