யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்ட கலாபவன் மணியின் படம்..!

Bookmark and Share

யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்ட கலாபவன் மணியின் படம்..!

2012ல் கலாபவன் மணி போலீஸ் அதிகாரியாக நடித்து, மலையாளத்தில் வெளியான படம் தான் 'பிரபுவிண்டே மக்கள்'... குறும்படங்களை இயக்கிவந்த சஜீவன் அந்திக்காடு என்பவர் வெள்ளித்திரையில் முதன்முதலாக இயக்கிய இந்தப்படம் சமூகத்தில் புரையோடிருக்கும் சில மூட நம்பிக்கைகளை நூதனமாக சாடியிருந்தது.

அதனால் படம் வெளியான சமயத்தில் சிலரின் எதிர்ப்புகளுக்கும் ஆளானது. இப்போது யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்தப்படம் மிகுந்த எதிர்ப்புக்கிடையே பிளாக் செய்திருப்பது சஜீவன் உட்பட பல படைப்பாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஜனவரி-8ஆம் தேதி யூ டியூப்பில் பதிவேற்றப்பட்ட இந்தப்படம் சில நாட்களிலேயே 1.25 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.. படம் ரிலீஸான போதே படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சில ஜாதி ரீதியான அமைப்புகள் இப்போதும் சும்மா இருப்பார்களா..? வரிந்துகட்டிக்கொண்டு சாதுர்யமாக சில காய்களை நகர்த்தி யூ டியூப்பில் இருந்து இந்தப்படத்தை பிளாக் பண்ண வைத்துவிட்டார்களாம்..

சென்ஸார் போர்டே ஓகே செய்து தானே எனது படத்தை வெளியிட சான்றிதழ் கொடுத்தது.. அப்படி இருக்கையில் படத்தை பிளாக் பண்ணும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது என குமுறுகிறார் இயக்குனர் சஜீவன்..


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions