கலாபவன் மணிக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை

Bookmark and Share

கலாபவன் மணிக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். கலாபவன் மணிக்கு மலையாள படங்களில் நடிக்க மலையாள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

தெய்வம் சாட்சி என்ற மலையாளப்படத்தில் நடிக்க அதன் தயாரிப்பாளர் சினேகஜித்திடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றிருந்தார் கலாபவன்மணி. ஆனால் படப்பிடிப்பு ஆரம்பமாகும்போது படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.

இதனால் தயாரிப்பாளர் சினேகஜித் மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறினார். இதையொட்டி அவசர செயற்குழுவை கூட்டிய தயாரிப்பாளர் சங்கம், கலாபவன் மணி மலையாள படங்களில் நடிக்க தடை விதித்தது.

தயாரிப்பாளர் சினேகஜித் படத்தில் நடிக்க வேண்டும் இல்லாவிட்டால் அவரிடம் வாங்கிய முன்பணத்தையும், அவருக்கு எற்பட்டிருக்கும் இழப்புக்கு நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். அப்போதுதான் தடை விலக்கிக் கொள்ளப்படும் என்ற தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கறிது.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions