காமெடி வில்லனாக கலாபவன் மணி!

Bookmark and Share

 காமெடி வில்லனாக கலாபவன் மணி!

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் கலாபவன் மணி. தமிழுக்கு மறுமலர்ச்சி படத்துக்காக மம்மூட்டியால் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ஜெமினி, வாஞ்சிநாதன், ஜித்தன், பந்தா பரமசிவம், அந்நியன், எந்திரன், கங்காரு, பாபநாசம் என சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

இதில் கடைசியாக நடித்த கங்காரு படத்தில் வில்லனாகவும், பாபநாசத்தில் கமலுடன் மோதும் போலீஸ்காரராகவும் நடித்திருந்தார். அதையடுத்து இப்போது பசுபதி முக்கிய வேடத்தில் நடித்து வரும் லவ்குரு படத்தில் காமெடியனாக நடிக்கிறார்.

இதற்கு முன்பு தமிழில் வில்லன், காமெடியன் என மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கும் கலாபவன் மணி இந்த படத்தில் பசுபதியுடன் மோதுபவராக நடித்தபோதும், அது காமெடி வில்லன்தானாம்.

அதோடு இப்படத்தில் வேறு காமெடியன்கள் இல்லாததால் கலாபவன் மணிக்கு அதிக காமெடி காட்சிகளை கொடுத்திருக்கிறார்களாம். அந்த வகையில், பாபநாசம் படத்தில் மிரட்டல் போலீசாக கமலையே சில காட்சிகளில் பந்தாடுபவராக நடித்த கலாபவன்மணி இந்த படத்தில் நகைச்சுவையால் ரசிகர்களை பந்தாடும் காமெடியனாக நடித்துள்ளார். 


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions