மெட்ராஸ் கலையரசனுக்கு மனைவி கொடுத்த பரிசு!

Bookmark and Share

மெட்ராஸ் கலையரசனுக்கு மனைவி கொடுத்த பரிசு!

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தவர் கலையரசன். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதால், அடுத்தபடியாக பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகி விட்டார்.

அதாவது ஜிகர்தண்டாவிற்கு பிறகு எப்படி பாபி சிம்ஹா ஹீரோவாக பிசியாக விட்டாரோ அதேபோன்று கலையரசனும் பிசியாகி விட்டார். அதனால் உடல் எடையை இன்னும் குறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் கலையரசன்.

இந்த நேரத்தில் அவருக்கு சைக்கிள் பயிற்சி முக்கியமாக வேண்டும் என்று பயிற்சியாளர்கள் கூறினார்களாம். அதை தெரிந்து கொண்ட அவரது மனைவி ப்ரியா ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள கேனான் டேல் என்ற ரக சைக்கிளை வாங்கி கலையரசனுக்கு பரிசளித்தாராம்.

இந்த மாதிரி ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்பது கலையரசனின் நீண்டநாள் கனவாக இருந்து வந்ததாம். அதனால் அதை மனைவியே சரியான நேரத்தில் தனக்கு வாங்கி தந்ததால் இன்ப அதிர்ச்சியடைந்த கலையரசன், இப்போது தினமும் காலை மாலை வேளைகளில் அந்த கேனான் டேல் சைக்கிளில் மணிக்கணக்கில் தனது வீடு அமைந்துள்ள ஏரியாக்களில் சுற்றுகிறாராம்.

பாடியை தான் எதிர்பார்த்தபடி பிட்டாக மாற்றும் வரை அவரது விடா முயற்சியும், பயிற்சியும் தொடருமாம்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions