தாணுவை சந்திக்க மறுத்த பைனான்ஸியர்!

Bookmark and Share

தாணுவை சந்திக்க மறுத்த பைனான்ஸியர்!

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருப்பது எவ்வளவு பெரிய தலைவலி என்பதை தாணு இப்போது புரிந்து கொண்டிருப்பார். கேயார் தலைவராக இருந்தபோது....அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த விரக்தியில் இருந்தார் தாணு.

அதன் காரணமாக கேயாரை செயல்படவிடாமல் வழக்குக்குமேல் வழக்குப்போட்டு அவரை செயல்படவிடாமல் முடக்கிப்போட்டார். பின்னர் அதையே காரணமாகச் சொல்லி தான் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பிறகு தினமும் பேச்சுவார்த்தை... பஞ்சாயத்து என அவரது பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் உத்தமவில்லன் படம் தொடர்பான பஞ்சாயத்தில்... அந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்த ஜஸ்வந்த்பண்டாரிக்கு எதிராக தாணு செயல்பட வேண்டியதாக இருந்திருக்கிறது.

உத்தமவில்லன் படத்தை வெளியே கொண்டு வருவதற்காக அப்போது அவர் செய்த விஷயம்...தற்போது தாணுவுக்கு எதிராகத் திரும்பிவிட்டது. ரஜினியின் கால்ஷீட் கிடைத்ததும்... ஜஸ்வந்த் பண்டாரியை சந்தித்து அவரிடம் பெரும் தொகையை பைனான்ஸ் கேட்க சென்றிருக்கிறார் தாணு.

உத்தமவில்லன் பஞ்சாயத்தில் அவர் நடந்து கொண்டவிதத்தினால் அப்ஸெட்டாகி இருந்த ஜஸ்வந்த் பண்டாரி தாணுவை சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம். அதுமட்டுமல்ல, ரஜினி படத்துக்கு பைனான்ஸ் தர மாட்டேன் என்றும் சொல்லி விட்டாராம்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions