நடிகர் சங்க தேர்தல் போட்டியை தவிர்க்க சமரசம் பேசும் கலைப்புலி தாணு!

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தல் போட்டியை தவிர்க்க சமரசம் பேசும் கலைப்புலி தாணு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று சென்னையில் நிருபர்களை சந்தித்து, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் இணைந்த கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

அந்த கூட்டறிக்கையில் “ காலம் சென்ற எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் அன்றைய காலக்கட்டத்தில் முன்னணியில் இருந்து நடிகர், நடிகையரால் கட்டி காப்பாற்றப்பட்டு வந்த சங்கம் தான் தென்னிந்திய நடிகர் சங்கம்.

அந்த சங்கத்தில் எப்போது தேர்தல் வந்தாலும், அமைதியாக நடைபெற்று, தேர்தல் முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கைகொடுத்து, கட்டிப்பிடித்து, அன்பை பறிமாறிக்கொள்வர். சக சங்கங்களுடன் இணக்கமாக, நட்பு பாராட்டி வருவது நடிகர் சங்கம் தான். 

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் என்றவுடன், அனைவரின் பார்வையும், கவனமும் நடிகர் சங்கத்தின் மீது விழுந்துள்ளது. தேர்தலை தவிர்த்து, சுமூகமான முடிவு எடுக்கவும், இரு அணி சார்பிலும், ஒருவர் மீது மற்றொருவர் அறிக்கைப்போர், பேட்டிகள் கொடுப்பது தவிர்க்க வேண்டும் என இந்த கூட்டறிக்கை வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். ‘ஊரு ரெண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பழமொழி உள்ளது. ஆனால் இன்று கூத்தாடி ரெண்டுபட்டதால், ஊருக்கு கொண்டாட்டமாக உள்ளது’. 

திரையில் தோன்றி மக்களை பரவசப்படுத்தும் நடிகர்கள், அவர்களை பின்பற்றும் ரசிகர்கள், பண முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவரும் நடிகர் சங்க தேர்தலை கண்காணித்து வருகின்றனர்.

இரு அணியினரும், எங்களுக்கு நண்பர்கள் தான். தேர்தலில் 2 அணிகளுமே நிரந்தரமாக எதிரெதிராக மாறிவிடுவார்களோ என்ற கவலை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இரு அணியினருமே சாராத பொதுவான திரை கலைஞர்கள் இதே கவலையை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். 

ஆகவே, எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமாக, இந்த ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் திரைப்பட சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. நாளை மறுநாள் (10-ந்தேதி) இரு அணியினரையும் அழைத்து பேசி, ஒரு சுமூகமான உடன்பாடு ஏற்பட கூட்டுக்குழு முயற்சி செய்கிறது” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர், கலைப்புலி தாணு நிருபர்களிடம் கூறும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் போட்டியால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே போட்டியை தவிர்க்கும் பொருட்டு, இந்த சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இரு அணியினருக்கும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி, அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்படும். சுமூக தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்’ என்றார். 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions