கலைப்புலி தாணு தலைமையில் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்!

Bookmark and Share

கலைப்புலி தாணு தலைமையில் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் நேற்று மாலை பதவி ஏற்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கியிருந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தேர்தல் நடைபெற்றது.

இதில் அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்வானார் கலைப்புலி எஸ் தாணு. துணைத் தலைவர்களாக எஸ் கதிரேசனும், பி எல் தேனப்பனும் தேர்வு செய்யப்பட்டனர். டிஜி தியாகராஜன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். டி சிவா மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரும் பொதுச் செயலாளர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ராதா பார்க் இன் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் அனைவரும் திரண்டு வந்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர். முன்னாள் தலைவர் கேஆர் நேரில் வந்து புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


Post your comment





Related News
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions