கபாலி வெற்றி விழாவில் தாணு பேசியது!

Bookmark and Share

கபாலி வெற்றி விழாவில் தாணு பேசியது!

கபாலி வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பேசியது , இன்று காலை நான் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்களை சந்தித்தேன்
அப்போது அவரிடம் நான் பழைய நினைவுகளை எல்லாம் யோசித்து கூறிக்கொண்டிருந்தேன்.

நான் சூப்பர் ரஜினி அவர்கள் நடித்த பைரவி படத்தை வாங்கியது பற்றியும் , அப்படத்திற்கு நான் எப்படி எல்லாம் விளம்பரம் செய்தேன் என்பது பற்றியும் , அவரை ராஜ குமாரி திரையரங்கில் சந்தித்தது பற்றியும் அப்போது அவர் என்னை அழைத்து அரவணைத்தது பற்றியும் அதன் பின்னர் நான் “ யார் “ படம் தயாரித்த போது அவர் சிறப்பு தோற்றத்தில் ஒரு காட்சியில் என்னோடு நடித்தது பற்றியும் அப்படத்தின் நூறாவது நாள் விழாவில் ஏழை நண்பன் பணக்கார நண்பன் கதையை சொல்லி , இங்கே ஏழை நண்பனாக தாணு இருக்கிறார்.

அவருக்கு நான் படம் பண்ண போகிறேன் என்று சொல்லி , அதன் பின்னர் கால கட்டங்கள் கடந்து கடந்து “ தெருப்பாடகன் “ பாடல் வெளியீட்டு விழாவில் வைத்து “ தாணுவுக்கு நான் ரசிகன் , எனக்கு தாணு ரசிகன் “ அவர் எனக்கு எந்த நேரத்தில் எனக்கு சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்தாரோ தெரியவில்லை இன்று வரை உங்கள் முன் சூப்பர் ஸ்டாராக நின்று கொண்டிருக்கிறேன் ஆக நான் அவரும் விரைவில் ஒரு படம் பண்ண போகிறோம் என்று சொன்னீர்கள். அதன் பிறகு பல முறை காலங்கள் கடந்து கடந்து சூப்பர் ஸ்டார் அவர்கள் ராம சந்திராவில் இருந்த போது நான் அவரை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஒரே காரணத்துக்காக ஸ்ரீ ராகவேந்திரா சாமிக்கு அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரதம் இருந்தேன்.

இந்த விரதம் பொய் இல்லை , இந்த விரதம் சத்தியமானது. , கண்டிப்பாக அவர் மீண்டு வந்து எனக்கு ஒரு படம் நடிப்பார் என்று நான் நம்பிக்கையோடு காத்திருந்தேன். அதே போல் சூப்பர் ஸ்டார் நன்கு குணமாகி வந்தார். அதன் பின்னர் திடீரென்று என்னை அழைத்து நாம் ஒரு படம் பண்ணாலம் என்றார் , நான் மகிழ்ச்சியுடன் சரி என்றேன். இரண்டு மூன்று இயக்குனர்களோடு பயணித்து , இறுதியில் சௌந்தர்யா அவர்கள் மெட்ராஸ் , அட்டக்கத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என்று கூறினார். எனக்கும் அவருடைய மெட்ராஸ் படத்தை பார்க்கும் போது முதல் பாதியில் வரும் செண்டிமெண்ட் காட்சி இரண்டாம் பாதியில் என்ன நடக்குமோ என்று நான் வியக்கும் அளவுக்கு என்ன கட்டி போட்டு இழுத்தது கண்டிப்பாக நான் அவரை வைத்து எடுக்கலாம் என்றேன். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் அவர்கள் இயக்குநர் ரஞ்சித் அவர்கள் தன்னிடம் கூறிய படத்தின் கதை நன்றாக உள்ளது நீங்களும் கேளுங்கள் என்று கூறினார். நான் அவரை அழைத்து கதை கேட்காமல் முழு ஸ்கிரிப்ட்டை தயாரித்து விட்டு வருமாறு கூறினேன். அதன் பின் சில நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டாரும் நானும் ஒன்றாக அமர்ந்து படத்தின் கதை கேட்டோம். கதை சொல்லி முடித்தவுடன் நான் எழுந்து கை தட்டினேன். ரஜினி சார் அவரை அனைத்து கொண்டார். அதன் பின்னர் நான் எந்த வேலையிலும் நான் தலையிடவே இல்லை. எல்லா வேலைகளையும் என்னுடைய மகன் பரந்தாமனும் என்னுடைய மாப்பிள்ளையும் பார்த்துக்கொண்டனர். உச்சத்தை தொடக்கூடிய சூழல் இப்படத்தில் உள்ளது என்பது மட்டும் என் மனதில் ஆணித்தனமாக இருந்தது. சூப்பர் ஸ்டார் அவர்களோடு பயணிக்கும் போது கிட்ட தட்ட 24 மணி நேரம் உழைத்தார் என்ற கூற வேண்டும்.காலை ஏழு மணிக்கு படபிடிப்புக்கு வந்த சூப்பர் ஸ்டார் விடியற்காலை நான்கு மணிக்கு சென்றார். அப்போது நான் அவரிடம் இப்படி உழைத்தால் உடல் நலம் என்ன ஆவது என்றேன் அதற்க்கு அவர் , எல்லோரும் ஆர்வமாக உழைக்கிறார்கள் இப்படியே போகலாம் என்று கூறினார். உடல் நலம் சரி இல்லாத போது கூட அவர் படபிடிப்பில் பங்கேற்று நடித்தது நிஜமாகவே பெரிய விஷயம்.

படம் தயாரானதும் நான் அவரும் படத்தை சேர்ந்து பார்க்க வேண்டியது , ஆனால் வேலை பளுவால் என்னை படத்தை பார்க்க முடியவில்லை.

சூப்பர் ஸ்டார் அவர்கள் மட்டும் படத்தை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு எங்களுடைய 36 வருட நட்புக்கு கபாலி ஒரு மகுடம் என்று கூறினார். அதன் பின்னர் அவர் நேரில் சென்று பார்த்த போது தாணு எல்லோரும் “ பாட்சா “ பாட்சா” என்று கூறுவார்கள்.

ஆனால் இது “ தளபதியும் “ “ நாயகனும் “ கலந்த ஒரு கலவை , ரஞ்சித் கிரேட் என்றார்.இன்னும் நிறைய பேச வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது அதை நான் படத்தின் வெற்றி விழாவின் போது பேச வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆசை. திரு. சோ அவர்கள் எனக்கு தொடர்பு கொண்டு அவரே என்னிடம் படம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் என்றார் சூப்பர் ஸ்டார் அவர்கள். படத்தை பார்த்த திரு. சோ அவர்கள் சூப்பர் ஸ்டாரிடம் கபாலியாக நீ வாழ்ந்திருக்கிறாய் என்றார்.

இது மிகப்பெரிய உச்சம். இது இப்படி என்றால் படத்தின் வசூல் மிக பிரம்மாண்டம். படத்தின் வசூல் சென்னை மாநகரில் மட்டும் 6நாட்களில் 6 கோடி என்று திரு. முனி கண்ணையா அவர்கள் என்னிடம் கூறினார்.

நான் இயக்குநர்களில் அதிகம் நேசிக்க கூடிய நபர் எஸ்.பி. முத்து ராமன் சார் அதற்கடுத்து இப்போது நான் ரஞ்சித்தை கூப்பிட்டு இன்னொரு படம் எனக்கு நீங்கள் பண்ண வேண்டும் என்று கூறியுள்ளேன் என்றார்.

 


Post your comment

Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions