டி.ராஜேந்தர் ஒரு குழந்தை மாதிரி என்கிறார் எஸ்.தாணு!

Bookmark and Share

டி.ராஜேந்தர் ஒரு குழந்தை மாதிரி என்கிறார் எஸ்.தாணு!

ரஜினிகாந்த் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்தபிறகு விஜயகாந்த் நடித்த படம் கூலிக்காரன். 1987ல் வெளியான இந்த படத்தை ராஜசேகர் இயக்க, டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற அப்படம் விஜயகாந்துக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.

அதோடு, அப்படத்தில் இடம்பெற்ற டி.ராஜேந்தரின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இதை சமீபத்தில் ஒரு சினிமா விழா மேடையில் நினைவுபடுத்தினார் கூலிக்காரன் படத்தை தயாரித்த எஸ்.தாணு. அதோடு, அந்த படத்தில் அவர் இசையமைத்த சில பாடல்கள் மட்டுமின்றி அவர் எழுதி இசையமைத்து தன்னை பெரிதும் கவர்ந்த சில பாடல்களையும் குறிப்பிட்டார்.

அதோடு டி.ராஜேந்தர் ஒரு படத்தில் தனது பங்களிப்பை செலுத்தியிருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக வெற்றி பெற்று விடும். அந்த அளவுக்கு அவரது தனித்திறமையை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்காக உழைத்திருப்பார். அதுமட்டுமின்றி, டி.ஆர் குழந்தை மனது கொண்டவர்.

மற்றவர்களின் பிரச்சினையைகூட தன் பிரச்சினையாக நினைத்து கண் கலங்கக்கூடியவர். முக்கியமாக, சினிமா உலகில் ஏதாவது பிரச்சினை என்று அவரது வீடு தேடி சென்று உதவி கேட்டால், அது நள்ளிரவாக இருந்தால்கூட உடனே எழுந்து வந்து, அதை தீர்க்க வழி சொல்லக்கூடிய ஒரு நல்ல மனிதர் அவர் என்றும் டி.ராஜேந்தர் பற்றி கூறுகிறார் எஸ்.தாணு.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions