தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் வியட்நாம் தற்காப்பு கலை

Bookmark and Share

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் வியட்நாம் தற்காப்பு கலை

வியட்நாம் நாட்டை பூர்வீகமாக கொண்ட தற்காப்பு கலை ஓவினாம். இந்த தற்காப்பு கலையை மையமாக வைத்து புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ‘கலைவேந்தன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 

இப்படத்தில் கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், நளினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஆர்.கே.பரசுராம் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து வருகிறார். 

கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளில் ஒன்றான ஓவினாம் தற்காப்பு கலையை மையமாக கொண்ட படம் என்பதால், இக்கலையில் பயிற்சி பெற்ற 100 ஓவினாம் கலைஞர்களை காரைக்காலில் இருந்து வரவழைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். 

இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளை பின்னி மில் மற்றும் ரெட்டேரி லாரி கிடங்குகளில் மிக பிரம்மாண்டமாக படமாக்கி உள்ளனர். பொதுவாக குத்து பாடல்களுக்கு பெயர் வாங்கும் ஸ்ரீகாந்த் தேவா, இந்த படத்தில் அருமையான மெலடி பாடல்களை தந்துள்ளார்.  

காமெடி, காதல் கலந்த ஆக்ஷன், திரில்லர் படமாக ‘கலைவேந்தன்’ உருவாகி உள்ளது. இப்படத்தை எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions