டபுள் ஹீரோ கதைகளில் மெட்ராஸ் கலையரசன்!

Bookmark and Share

டபுள் ஹீரோ கதைகளில் மெட்ராஸ் கலையரசன்!

நந்தலாலா, அட்டகத்தி, முகமூடி ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் கலையரசன். அதையடுத்து ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பில், கதிர் நாயகனாக நடித்த மதயானைக்கூட்டம் படத்தில் கதிரின் அண்ணனாக நடித்தார். அது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக அமைந்தது.

அதேபோல், அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் அவருக்கு இன்னொரு ஹீரோ போன்ற வேடம் கிடைத்தது.

அதுவும் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்திய வேடம். விளைவு, இப்போது கலையரசனும் ஷோலோ ஹீரோவாகி விட்டார். ஆனால், அவரைப்பொறுத்தவரை சிங்கிள் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போடுவதில்லை.

என் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வேடமாக இருந்தால் டபுள் ஹீரோ கதைகளில் நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று முன்கூட்டியே முன்மொழிந்து விடுகிறார்.

அதனால் தற்போது டபுள் ஹீரோ கதைகள் என்றால் டைரக்டர்கள் தேடிச்செல்வது கலையரசனைத்தான். அந்த வகையில், இரண்டு படங்களில் சிங்கிள் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும், உருமீன் படத்தில் பாபி சிம்ஹாவுடனும், காலச்சுடர் என்ற படத்தில் பிரசன்னாவுடனும் இணைந்து நடிக்கும் கலையரசன், மேலும் சில ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions