ரஜினியுடன் இணைந்து நடிக்கும் மெட்ராஸ் கலையரசன்

Bookmark and Share

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் மெட்ராஸ் கலையரசன்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், ‘லிங்கா’ படத்தையடுத்து ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினி, கடைசியாக ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக வித்யாபாலனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் கலையரசனின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இவர்கள் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் துவங்க இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions