கபாலி படத்தை திருட்டு விசிடி எடுக்க நினைக்கும் கும்பலுக்கு தாணு வைத்த செக்!

Bookmark and Share

கபாலி படத்தை திருட்டு விசிடி எடுக்க நினைக்கும் கும்பலுக்கு தாணு வைத்த செக்!

சென்னை ஐகோர்ட்டில், ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழ் திரைப்படங்கள் பல தயாரித்துள்ளேன். தற்போது பெரும் செலவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ என்ற படத்தை தயாரித்துள்ளேன். இந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. பொதுவாக அண்மை காலங்களில் ஒரு புதிய திரைப்படம் திரைக்கு வந்த அடுத்த சில நிமிடங்களில், அந்த திரைப்படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி விடுகிறது.

இதனால், பெரும் தொகை செலவு செய்து திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, திருட்டு சி.டி.யாக வெளிவந்து விடுகிறது. பொதுவாக இதுபோல திருட்டு சி.டி.க்களை வெளியிடுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், தீவிரமாக, கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்தியாவை பொருத்தவரை 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த சேவை வழங்கும் நிறுவனங்களில் சேவையை பெறும் நபர்கள் தான், இதுபோல திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். இந்த 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், இதுபோல புதிய படங்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுக்க முடியும்.

ஏற்கனவே ‘இந்தியாவின் மகள்’ என்ற திரைப்படம் இணையதளத்தில் வெளியானது. மத்திய அரசு, இணையதள சேவை வழங்கும் நிறுவனத்துக்கு வழங்கப்படும் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததும், அடுத்த சில நொடிகளில் அந்த திரைப்படம் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

எனவே, திருட்டுத்தனமாக வெளியாகும் புதிய திரைப்படங்களை உடனே இணையதளத்தில் இருந்து நீக்கவும், அந்த இணையதளத்தில் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்வதை தடுக்கவும் மத்திய அரசாலும், மாநில அரசாலும் முடியும். ஆனால், இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்காததால்தான், பல திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகுகிறது. ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக சென்றடைகிறது.

எனவே, ‘கபாலி’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இணையதளத்தில் வெளியிட 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி இணையதளத்தில் ‘கபாலி’ படம் வெளியானால், இந்த இணையதள சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions