கலைப்புலி தாணுவை கைது செய்ய சிவில் கோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

கலைப்புலி தாணுவை கைது செய்ய சிவில் கோர்ட்டு உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட். இவர், சென்னை 10-வது உதவி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘வி.கிரியேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கலைப்புலி எஸ்.தாணு எனக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும். இதுகுறித்து நாகர்கோவில் முதன்மை சார்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.2 லட்சத்தையும், அதற்குரிய வட்டி தொகையையும் சேர்த்து கலைப்புலி தாணு எனக்கு வழங்கவேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்  தேதி தீர்ப்பளித்தார். ஆனால், தாணு பணத்தை வேண்டுமென்றே வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். 

அவரது பெயரில் சொத்துக்கள் சென்னையில் உள்ளன. தற்போது பல கோடி ரூபாய் செலவு செய்து ‘கபாலி‘ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். எனவே, வசதி இருந்தும் பணம் தராத தாணுவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்க எஸ்.தாணுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கணேசன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கலைப்புலி தாணுவை வருகிற 28-ந் தேதிக்குள் போலீசார் கைது செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணை 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions