தமிழ் சினிமா படப்பிடிப்பு, பட வெளியீட்டை 3 மாதங்களுக்கு ரத்து செய்ய தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை

Bookmark and Share

தமிழ் சினிமா படப்பிடிப்பு, பட வெளியீட்டை 3 மாதங்களுக்கு ரத்து செய்ய தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை

சினிமா படப்பிடிப்பு, வெளியீட்டை 3 மாதங்கள் நிறுத்திவைப்பது பற்றி தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து சங்கங்களுடன் பேசி முடிவு எடுக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2015-ம் ஆண்டிற்கான முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன் தினம்  நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமை தாங்கினார். செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் கதிரேஷன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னாள் தலைவர்கள் இப்ராம் ராவுத்தர், கே.முரளிதரன் உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்குழு கூட்டம் முடிந்த பின், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரைப்பட தயாரிப்பு தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் சினிமா தயாரிப்பு தொழிலில் 95 சதவீத தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. திருட்டு வி.சி.டி., பட தயாரிப்பு செலவு போன்ற பிரச்சினைகளால் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

தயாரிப்பு செலவை குறைப்பது பற்றியும், பட வெளியீடுகளை நெறிமுறைப்படுத்துவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு படதயாரிப்பு, படப்பிடிப்பு, படவெளியீடு உள்ளிட்ட ஒட்டுமொத்த திரைப்பட பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டார்கள். அப்போது, ‘6 மாதங்களுக்கு பதில் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு சினிமா தொழிலை நிறுத்தி வைக்கலாம் என்று சிலர் யோசனை தெரிவித்தார்கள்.

இதுபற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னிச்சையாக உடனடியாக முடிவு செய்ய முடியாது. சினிமா தொழிலில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் கலந்து பேசி முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கு 2 வாரகால அவகாசம் வேண்டும். இது தொடர்பாக அனைத்து சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி முடிவு செய்வோம்.

இவ்வாறு கலைப்புலி தாணு கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக இசையமைப்பாளர் இளையராஜா 10 ஊர்களில் இசை நிகழ்ச்சி நடத்தி தர சம்மதித்தற்கு பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions