ஐதராபாத்தில் 4 நாட்கள் நடக்கும் இந்திய திரைப்பட விழா

Bookmark and Share

ஐதராபாத்தில் 4 நாட்கள் நடக்கும் இந்திய திரைப்பட விழா

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் கங்காராஜ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:-

இந்திய திரைப்பட விழா ‘இண்டிவுட் பிலிம் கார்னிவல்’ என்ற பெயரில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் வருகிற 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 75 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்திய திரையுலகை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்கின்றனர். 

இந்த விழாவில் இந்திய திரைப்பட துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கருத்தரங்குகள், பல்வேறு தலைப்புகளின்கீழ் விவாதங்கள், திருட்டு வி.சி.டி.யை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், சர்வதேச முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டுவருதல், தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்துதல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.

விழாவில் விவாதிக்கப்படும் கருத்துகள் அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்படும். இந்த விழா இந்திய திரைப்பட துறையின் வளர்ச்சிக்கு பயன்படுவதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

பேட்டியின்போது, திரைப்பட விழா திட்ட இயக்குனர் சோகன்ராய் உடன் இருந்தார். 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions