மீண்டும் ஒரு காதல் கதையை வாங்கினார் தாணு

Bookmark and Share

மீண்டும் ஒரு காதல் கதையை வாங்கினார் தாணு

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தட்டத்தின் மறையத்து படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்.

புதுமுகம் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகிறார். தட்டத்தின் மறையத்து படத்தில் நடித்த இஷா தல்வார் இதிலும் அதே கேரக்டரில் நடிக்கிறார். தில்லுமுல்லு படத்துக்கு பிறகு இஷா நடிக்கும் படம் இது.

இவர்கள் தவிர நாசர், மனோஜ் கே.ஜெயன், தலைவாசல் வவிஜய், சிங்கமுத்து, சிங்கம்புலி, வனிதா நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இந்து பையனும், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் காதலிக்கிற கதைதான் என்றாலும் அதனை கவிதையாக அழகாக சொல்கிற படம்.

கதை களம் கன்னியாகுமரி. சத்தமே இல்லாமல் பெரும்பகுதி படத்தை எடுத்து முடித்து விட்டார்கள். தற்போது படத்தை தயாரிக்கும் பிளாக் டிக்கெட் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து கலைப்புலி எஸ்.தாணு வாங்கியிருக்கிறார். தனது வி கிரியேஷன் மூலம் அதனை வெளியிடுகிறார். 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions