திருட்டு விசிடியை தடுக்க குழுக்கள் : தாணு அறிவிப்பு

Bookmark and Share

திருட்டு விசிடியை தடுக்க குழுக்கள் : தாணு அறிவிப்பு

திருட்டு விசிடிக்களை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக, 32 மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.

திருட்டு விசிடிக்கள் குறித்து, சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசில், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருட்டு விசிடிக்களினால், திரையுலகை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு மடடுமல்லாது, அவர்களது வாழ்வாதாரம் பெரும் அழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே, இந்த திருட்டு விசிடிக்கள் வெளிவந்துவிடுகின்றன. ஒரு படம் உருவாவாதற்கு பல நூறு குடும்பங்கள் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளன.

இந்த திருட்டு விசிடிக்களால், பல நூறு குடும்பங்கள் கடும் இன்னலுக்குள்ளாகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டு விசிடிக்களை தடுக்கும் பொருட்டு, 32 மாவட்டங்களிலும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் தலைமயிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுக்கள், திருட்டு விசிடிக்கள் குறித்து கண்காணிக்கும் என்று கலைப்புலி எஸ்.தாணு மற்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்தனர்


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions