ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பிரம்மாண்ட பாராட்டுவிழா: கலைப்புலி தாணு

Bookmark and Share

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பிரம்மாண்ட பாராட்டுவிழா: கலைப்புலி தாணு

கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா உணவளிக்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு பேசும்போது,

இவ்விழாவிற்கு விழாவிற்கு வருமாறு இளையராஜா அவர்களை அன்புடன் நான் அழைக்கும்போது, இளையராஜா அவருடைய தாய், தந்தை இடத்தில் பூஜை நடத்திக் கொண்டிருந்தார். நான் கூறியதும் உடனடியாக கலந்து கொள்வேன் என்று கூறினார்.

இப்ராகிம் ராவுத்தர் 95 சதவீத தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளார்கள் என்று கூறினார். தயாரிப்பாளர்களாக இருக்கும் 500 பேருக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அவர்களது இல்லம் தேடி செல்லும் அளவுக்கு எங்களுடைய உழைப்பு இருக்கும்.

இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் மெட்டமைத்திருக்கிறார். ஆனால், எந்த பாடலும் மற்றொரு பாடலை தொடாமல் இருக்கும். அவர் ஒரு அட்சயப் பாத்திரம், அமுத ஊற்று.

1000 படங்களை தொட்ட சாதனையை பாராட்டும் விதமாக அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் சார்பில் மிகப்பெரிய விழாவாக எடுப்போம். இந்தியாவில் இதுபோன்ற ஒரு விழா நடத்தியிருக்க முடியாது என்கிற அளவுக்கு அது பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறினார். 


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions