கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் 'நையப்புடை'

Bookmark and Share

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் 'நையப்புடை'

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. தற்போது, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் ‘நையப்புடை’ என்ற படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கவிருக்கிறாராம். கதாநாயகனாக பா.விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ‘ஆரோகணம்’ விஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். புதுமுக இயக்குனர் விஜய் விக்ரம் என்பவர் இயக்குகிறார். தாஜ்நூர் இசையமைக்க, ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு கூறுகையில், ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க நகைசுச்வையாகவும் சொல்லியிருக்கும் படம்தான் இது. இயக்குனர்கள் பவித்ரன், ஷங்கர், ராஜேஷ் பொன்ராம் இவர்களை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து புறப்பட்டு வரும் அடுத்த இயக்குனர் விஜய் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் மகன் இளையதளபதி விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரையும் ஹீரோவாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வலம் வருவார் என்பது நிச்சயம் என்று கூறினார்.

கலைப்புலி எஸ்.தாணு, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கபாலி’ படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions