வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு

Bookmark and Share

வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு

அனுஹாசன், நாசர், டேவிட், பாலாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘வல்லதேசம்’. நந்தா இயக்கியுள்ள இப்படத்திற்கு எல்.வி.முத்துக்குமாரசாமி என்பவர் இசையமைக்கிறார். இவர் தன்னுடைய இசையமைப்பில் சிம்பு, சாந்தனு பாக்யராஜ், ஹரிஸ் கல்யாண் போன்ற நடிகர்களை பாட வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது முத்துக்குமாரசாமி 'Shades of Love' என்ற பெயரில் புதிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்தில் இடம்பெறும் பாடலை முத்துக்குமாரசாமியே பாடியுள்ளார். நட்சத்திரா என்ற புதுமுக நடிகை இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்.

இந்த ஆல்பத்தின் பாடல்களுக்கான வரிகளை லண்டனில் வசித்துவரும் முல்லை நிஷந்தன் என்பவர் எழுதியிருக்கிறார். நவீன் ஜான்சன் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவை கண்ணன் கவனித்துள்ளார். தீபக் எஸ்.துவாராகாந்த் எடிட்டிங் செய்திருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை எல்.வி.கணேசன் தயாரித்துள்ளார்.

இந்த ஆல்பத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற அக்டோபர் 24-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர். இந்த சிங்கிள் டிராக்கை ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘கபாலி’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு வெளியிடவுள்ளார். 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions