தாணு தயாரிக்கும் ரஜினி படத்துக்கு தலைப்பு தேர்வு

Bookmark and Share

தாணு தயாரிக்கும் ரஜினி படத்துக்கு தலைப்பு தேர்வு

ரஜினி நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை ரஞ்சித் இயக்குகிறார். இவர் அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை எடுத்து பிரபலமானவர். கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இவர் 40 வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணியா பிலிம்ஸ் கலைப்புலி இண்டர் நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களை தொடங்கி கலைப்பயணத்தை தொடங்கியவர். ரஜினி நடித்த பைரவி படத்தை வெளியிட்டார். ரஜினிக்கு முதன் முறையாக அவரது பெயரோடு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இணைத்து விளம்பரமும் செய்தார்.

விநியோகஸ்தராக இருந்த தாணு 1984–ல் 'யார்' என்ற படம் மூலம் தயாரிப்பாளரானார். அவர் தயாரித்து இயக்கிய ‘புதுப்பாடகன்’ உள்ளிட்ட சில படங்களை ரஜினிதான் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ரஜினியை வைத்து படம் தயாரிக்க 35 வருடங்களாக தாணு காத்திருந்தார். தற்போது அது நிறைவேறியுள்ளது. தனது வி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் ரஜினி படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆகஸ்டு மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு துவங்கி 60 நாட்கள் நடக்கிறது. தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்த படத்துக்கு முரளி. ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மெட்ராஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். பாடல்களை கபிலன், உமாதேவி, கானா பாலா எழுதுகின்றன. பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்துக்கு இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. நாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதில் ரஜினி வயதான தாதா கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு தலைப்பு தேர்வு செய்துள்ளனர். விழா நடத்தி தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளனர்.


Post your comment

Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions