கலையரசனுக்கு ஜோடியாகும் ஜனனி ஐயர்!

Bookmark and Share

கலையரசனுக்கு ஜோடியாகும் ஜனனி ஐயர்!

கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படம் மூலம் புகழ் பெற்றவர் கலையரசன். இந்த படத்தில் கலையரசனின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.

இப்படத்தை அடுத்து ‘டார்லிங் 2’ படத்தில் நடித்தார். இப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தில் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் அடுத்ததாக புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ‘அவன் இவன்’, ‘தெகிடி’ ஆகிய படங்கள் மூலம் புகழ் பெற்ற ஜனனி நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

ரொமான்ஸ் மற்றும் காமெடியை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
நடிகை அனுஜாவுக்கு குழந்தை பிறந்தது
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions