`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா

Bookmark and Share

`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா

சுந்தர்.சி இயக்கி வரும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த கூட்டணியில் நடிகை நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை நந்திதா அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், `கலகலப்பு-2' கூட்டணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. சுந்தர்.சி-க்கு நன்றிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவ்னி சினிமாஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, காசி, இந்தூர், புனே மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment





Related News
யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா
பெரிய போராட்டத்தை சந்தித்து நடிகை ஆனேன்: ஸ்வேதா கய்
விபச்சார வழக்கில் சிக்கியது எப்படி? பிரபல நடிகை பேட்டி!
உள்குத்து திரைப்படம் நந்திதாவுக்கு மைல்கல்லாக அமையும்: நடிகர் தினேஷ்
இந்தி பட டைரக்டருடன் நடிகை ஸ்வேதா பாசு காதல்!
செல்ஃபிக்கு நோ சொல்லும் நந்திதா!
கவர்ச்சியாக நடித்து அலுத்து போய் விட்டது: சுவேதா மேனன்
ராதிகா ஆப்தேவிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்வேதா பாசு
ஸ்வேதா மேனன் படுகாயம் கால் எலும்பு முறிந்தது
தாய்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஸ்வேதா மேனன் காயம்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions