“கலாம் விருதுகள்” அறிமுக விழா

Bookmark and Share

“கலாம் விருதுகள்” அறிமுக விழா

“கனவு” என்ற சொல், மந்திரமாக மாறி ஒவ்வொருவர் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆயுதமாக, இந்தியாவின் முதல் குடிமகன் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

“கலாம் விருதுகள்” இதற்கான மேடையாக இளைஞர்களுக்கும் மற்றும் வயது பேதமின்றி அனைவருக்கும் ஊன்றுகோலாக அமையவிருக்கிறது. “கலாம் விருதுகள்” முற்றிலும் மாறுபட்ட, புதுமைகள் நிறைந்த, திறமை வாய்ந்த அனைவருக்கும் களம்  அமைத்துக் கொடுக்கிறது.

பல்வேறு துறையிலும் புதுமைகள் மற்றும் சாதனைகள் படைத்து, அதை வெளி உலகிற்கு எடுத்துச்செல்ல முடியாத இளைஞர்கள் மற்றும் எல்லா வயதினர்களுக்கும், நடுவர்களின் பரிந்துரை மற்றும் முடிவின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்த “கலாம் விருதுகள்” ஒரு மாபெரும் அரங்கில் வழங்கப்படும். இவ்விருதின் அறிமுக விழாவானது வருகின்ற அக்டோபர் மாதம் 10 – ந் தேதி , சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் மாலை 6 மணியளவில் மாண்புமிகு ஆளுநர் ரோசய்யா 

அவர்கள் தலைமையேற்க, நமது டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களது குடும்ப உறுப்பினர்களான திரு. ஷேக் சலீம் மற்றும் திரு. ஷேக் தாவுத் அவர்கள் முன்னிலையில், சிறப்பு விருந்தினர்களுடன் அரங்கேற்றப்படவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கோவை, சேலம், மதுரை மற்றும் திருச்சி நகரங்களில் விழாக்கள் நடத்தப்படவுள்ளது. “கலாம் விருதுகள்” குறித்த விழிப்புணர்வு ஏற்படவும், விருதுக்கான பதிவுகள் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது. மேலும் இது குறித்த விபரங்களுக்கு  www.kalamawards.com | www.kalamvirudhugal.com  என்ற இணையதளத்தை அணுகவும்.  

Fusion Media & Entertainments கோவை மற்றும் சென்னையை மையமாகக் கொண்ட புதிய தலைமுறைக்கான பொழுதுபோக்கு மற்றும் ஊடக நிறுவனம். திறமை வாய்ந்த கலைஞர்களையும், தலை சிறந்த தொழில்நுட்பவியலாளர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் சேவையை மையமாகக் கொண்டு தனது பணியை முன்னிறுத்துகிறது இந்த நிறுவனம். 

“FUSION” என்ற சொல், ஒருங்கிணைப்பை உணர்த்துகிறது. மாற்று சிந்தனையையும், திறமையையும்,  புதிய முயற்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் தேர்வு செய்து அங்கீகரித்து, கனவுகளை களமாக்குகிறது. Fusion Media & Entertainments நவயுக தொழில்நுட்பங்ககளையும், அவை சார்ந்த பொருத்துதல்களையும், அவர்களுடைய மேன்மையான படைப்புத் திறன்களையும் அங்கீகரிக்கிறது.

 Fusion Media & Entertainments ஊடகத்துறையிலும், பொழுதுபோக்கு அம்சங்களையும் (குறும்படம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள்) கொண்டு வளர்ந்து வரும் தயாரிப்பு  நிறுவனம். 2009 ம் ஆண்டு இந்நிறுவனம் தனது சேவையை தொடங்கியது முதல் பல நிகழ்சிகளையும், 
விழாக்களையும் பொறுப்பேற்று நடத்தி தமது வாடிக்கையாளர்களின் வேலைப்பளுவையும், மனச்சுமைகளையும் குறைத்து மறக்கவியலா சிறப்பையும், நம்பிக்கையையும் பெற்றிருக்கிறது. 

Fusion Media & Entertainments தனது வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, ஒப்பந்ததாரர்களுக்கும், இணை நிறுவனங்களுக்கும் தனது சேவை உத்திரவாதத்தை உறுதி செய்கிறது. இந்நிறுவனத்தின் சேவை கோவை மற்றும் சென்னையில் மட்டுமல்லாது உலக அளவிலும் கிளைகளை பரப்பவும், சேவையாற்றவும் திட்டமிட்டுள்ளது.

Fusion Media & Entertainments மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு, மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை மற்றும் மேலாண்மைத் திறன் குறித்த விழிப்புணர்வு, மாரடைப்பு மற்றும் பொது மருத்துவ ஆலோசனைகள், ஆதரவற்றோர் விடுதிகளுக்கு உதவுவது போன்ற பல்வேறு சமூக நலப்பணிகளையும், அவை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்சிகளையும் ஒரு சமூக கடமை உணர்வோடு நடத்தி வருகிறது.

தனது முக்கிய பணியாக இளைஞர்கள் மட்டுமல்லாது வயது பேதமின்றி அனைவருக்கும், அனைத்து துறை சார்ந்தும், அங்கீகரிக்கபடாத, அடையாளம் காட்டப்படாத திறமைகளையும், கண்டுபிடிப்புகளையும், தனித்துவங்களையும் கள ஆய்வுக்கு உட்படுத்தி 
கௌரவிக்கிறது.


Post your comment

Related News
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions