காவல் துறை அதிகாரியாக களஞ்சியம்

Bookmark and Share

காவல் துறை அதிகாரியாக களஞ்சியம்

இயக்குனரும், நடிகருமான களஞ்சியம் தற்போது ‘கோடை மழை’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் களஞ்சியம் காவல் துறை அதிகாரியாக வருகிறார்.  கதிரவன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் களஞ்சியம் பேசும்போது, ‘இப்படத்தில் நான் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறேன். ராணுவத்திற்கும் காவலுக்கும் இடைப்பட்ட போராட்டத்தை இயக்குனர் கதிரவன் அழகாக பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை வைரமுத்து பார்த்து விட்டு படம் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்’ என்றார்.

கண்ணன் பேசும்போது, என்னுடைய வாழ்க்கையில் ‘‘ ‘கோடை மழை’ படம் முக்கியமான படமாக இருக்கும். திருநெல்வேலி பாஸை பழகுவதற்காக இயக்குனர் எங்களை 15 நாட்கள் முன்னதாகவே அழைத்து சென்று எங்களுக்கு பயிற்சி கொடுத்தார்’’ என்றார்.

ஸ்ரீபிரியங்கா பேசும்போது, ‘‘என்னுடைய கதாபாத்திரத்திற்கு வசனங்களை விட முகபாவனைக்கு முக்கியம் கொடுத்து இயக்குனர் படமாக்கியிருக்கிறார். என்னுடைய அண்ணனாக களஞ்சியமும், காதலனாக கண்ணனும் நடித்திருக்கிறார்கள்.

அண்ணனுக்கும் காதலனுக்கும் இடையே சிக்கி தவிக்கும் படியாக என்னுடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தயாரிப்பாளர் அலேக்ஸாண்டர் பேசும்போது, ‘‘தரமான படத்தை தயாரித்திருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. 1-ம்தேதி இப்படம் வெளியாகவுள்ளது. எல்லோருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்’’ என்றார்.


Post your comment





Related News
மு.களஞ்சியம் இயக்கும் களவு தொழிற்சாலை !
மீண்டும் படம் இயக்குகிறார் மு.களஞ்சியம்!
உயிர் காத்த நடிகை ரோஜாவுக்கு நன்றி - விபத்திலிருந்து பிழைத்த இயக்குநர் களஞ்சியம் உருக்கம்
தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களின் துன்பத்தை சொல்லும் படம்
களஞ்சியத்துக்கு பணம் கொடுக்க அஞ்சலி மறுப்பு?
இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மருத்துவமனையில் அனுமதி
இன்னொரு நடிகையும் ஓட்டம் ?
அஞ்சலியை மீண்டும் துரத்தும் இயக்குனர் களஞ்சியம்..!
அஞ்சலியின் ரகசியங்களை வெளியிடுவேன் மிரட்டும் - இயக்குநர் மு.களஞ்சியம் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions