ஹீரோவாக நடிக்க மாட்டேன்! - காளி வெங்கட்

Bookmark and Share

ஹீரோவாக நடிக்க மாட்டேன்! - காளி வெங்கட்

தெகிடி, கேரள நாட்டிளம் பெண்களுடனே, முண்டாசுப்பட்டி உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் காளி வெங்கட். தற்போது, இந்தியா பாகிஸ்தான், மாரி, மாப்ள சிங்கம், இறுதிச்சுற்று, உறுமீன், வல்லவன் என 10 படங்களுக்கு மேல் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், ஒரு படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது. இந்த செய்தியை உறுதிப்படுத்த காளி வெங்கட்டை தொடர்புகொண்டபோது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஹீரோவாக நடிக்க வேண்டுமென்ற ஆசையும் எனக்கில்லை என்கிறார்.

மேலும், ஹீரோவாக நடிக்க வேண்டுமென்றால் அதற்கென்று ஒரு முகம், பாடிலாங்குவேஜ் வேண்டும். ஆனால் எனக்கு அது இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். அதோடு, தினமும் நான் எனது முகத்தை கண்ணாடியில் பார்க்கிறேன்.

அதனால் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்று யாராவது எனக்கு ஆசை காட்டினாலும் நான் உடன் படமாட்டேன் என்கிறார். அதுமட்டுமின்றி, இப்போது ஹீரோக்களின் நண்பனாக நடிக்கிறேன்.

சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடிக்கிறேன். அந்த வகையில் காமெடி மட்டுமின்றி, செண்டிமென்ட் வேடங்களும் எனக்கு தருகிறார்கள். அதனால் இதுவே நிறைவாக உள்ளது.

என்னை நம்பி டைரக்டர்கள் தரும் இந்த கேரக்டர்களில் சிறப்பாக நடித்து நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் இப்போது எனது முழுக்கவனமும் உள்ளது. அதனால், காளி வெங்கட் ஹீரோவாக நடிக்கிறார் என்று இனி யாராவது வதந்தி பரப்பினால், தயவு செய்து யாரும் அதை நம்பாதீர்கள் என்கிறார்.


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions