மீண்டும் இணையும் கலையரசன் - காளி வெங்கட்

Bookmark and Share

மீண்டும் இணையும் கலையரசன் - காளி வெங்கட்

கலையரசனும், காளி வெங்கட்டும் இணைந்து ‘டார்லிங் 2’, ‘ராஜா மந்திரி’ ஆகிய படங்களில் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகும் இப்படத்தை ஜானகி ராமன் என்பவர் இயக்குகிறார். இவர் இறுதிச்சுற்று படத்தில் இயக்குனர் சுதாவுக்கு அசோசியேட்டாக பணியாற்றியவர்.

இந்த படம் குறித்து காளி வெங்கட் கூறும்போது, மூன்று ஜோடிகளுக்குள் வெவ்வேறு இடங்களில் நடக்கும் காதல், ஒரே புள்ளியில் இணைவதுதான் படத்தின் மையக்கரு. இப்படத்தில் நான் கிராமத்து ஆளாக நடிக்கிறேன். கலையரசன் சிட்டியில் இருந்து வரும் பையனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக அகத்திணை படத்தில் நடித்த வர்மா ராமசாமி நடிக்கிறார் என்றார்.

இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கவிருக்கிறார். மேலும், காளி வெங்கட்டுக்கு மதுமிதா, வர்மா ராமசாமிக்கு மது ஷாலினி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். வி.எஸ்.தருண் பாலாஜி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தை சிவி குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். 


Post your comment





Related News
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
இந்த இளம் நடிகருக்கு இப்படியொரு ரசிகையா – அதிர்ச்சி தரும் செய்தி!
பிரபல பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமானார்!
ஆந்திர ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள கதகளி!
கதகளியில் சர்ச்சைக்குரிய வசனம்: தணிக்கைக்குழு அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
விளம்பரமில்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார் ரஜினி - கலைப்புலி தாணு
தென்னிந்தியாவின் அமிதாப் பச்சன் எஸ்ஏசி! – கலைப்புலி தாணு
ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்!
நாளை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் கதகளி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions