காளிதாசுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி

Bookmark and Share

காளிதாசுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி

பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் விஜய் சேதுபதி. இப்படம் கொடுத்த வெற்றி அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

அன்றுமுதல் இன்றுவரை பாலாஜி தரணிதரனும், விஜய் சேதுபதியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். பாலாஜி தரணிதரன் தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் சேதுபதி திடீரென விசிட் அடித்து படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்தார். மேலும், படத்தின் நாயகன் காளிதாசுடன் இணைந்து செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

‘ஒரு பக்க கதை’ படத்தை வாசன்ஸ் விசுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் மூலம் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கிறார். கோவிந்த் மேனன் இசையமைத்து வருகிறார். 


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions