தென்னிந்தியாவின் அமிதாப் பச்சன் எஸ்ஏசி! – கலைப்புலி தாணு

Bookmark and Share

தென்னிந்தியாவின் அமிதாப் பச்சன் எஸ்ஏசி! – கலைப்புலி தாணு

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் ‘ நையப்புடை’. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது “நினைத்ததைவிட ‘நையப்புடை’ படம் நன்றாக வந்திருக்கிறது. நகைச்சுவை, சண்டை என எஸ்.ஏ.சி யின் பலமுகங்கள் படத்தில் வெளிப்பட்டுள்ளன.

படம் பார்த்து மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். ‘நையப்புடை’ பெரிய படமாக வரும் என்றேன். வட இந்தியாவில் அமிதாப் பச்சன் போல தென் இந்தியாவில் நல்ல நடிகராக எஸ்.ஏ.சி வருவார்” என்றார்.

முன்னதாக லிடியோன் நாதஸ்வரம் என்கிற 9 வயது சிறுவன் டிரம், பியானோ வாசித்துக் காட்டினான். அதைப் ரசித்து விட்டுப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், ”இவனுக்கு முன்பாக நாம் எல்லாம் ஒன்று மில்லை.” என்று கூறிப் பாராட்டினார்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions