இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரின் ‘கள்ளபடம்’ பாடல்கள் நாளை வெளியீடு

Bookmark and Share

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரின் ‘கள்ளபடம்’ பாடல்கள் நாளை வெளியீடு

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் J வடிவேல் முதன் முறையாக இயக்கும் கள்ளப்படம் திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகிறது. நடிகர் விஷாலின் ‘V Music’ ஆடியோ நிறுவனம் இப்பாடல்களைவெளியிடுகிறது.
 
பூஜை , அம்பள பாடல்களின் வெற்றியை தொடர்ந்து ‘ V Music’ கள்ளப்படம் திரைப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறது. ‘இசை’, ‘காக்கி சட்டை’ படங்களின் டிஜிட்டல் காலர் டியூன்களையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு சேர்த்த பெருமையும் ‘ V Music’ நிறுவனத்தை சாரும்.   

இறைவன் ஃபிலிம்ஸ் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குனர் வடிவேல் இசையமைப்பாளர் கே விடம் தனக்கு தேவையான இசையை  அழகிய வடிவில் பெற்றிருக்கிறார்.

“ஒரு படத்தின் பாடல்களே அப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட பாடல்களை பட்டி தொட்டியெங்கும் இட்டு செல்வது நல்ல ஆடியோ கம்பெனி. நல்ல ஆரம்பம் நல்ல முடிவை தரும். தாங்கள் வெளியிடும் பாடல்களை முன்னெடுத்து செல்வதில் பெருத்த உழைப்பை செலவிடும் ‘V Music’ நிறுவனம் எங்களது பாடலை வெளியிடுவது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. V  என்றாலே  விக்டரி அல்லது வெற்றி தானே“ என்று கூறினார்  புதுமுக இயக்குனர் வடிவேல். 


Post your comment





Related News
தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்! இயக்குனர் சொல்லும் உண்மை
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா
இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் நீ வரனும் - தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்
முதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions