சிஷ்யருக்கு உதவும் மிஷ்கின்

Bookmark and Share

சிஷ்யருக்கு உதவும் மிஷ்கின்

முன்னணி இயக்குனர்கள் தங்களது உதவி இயக்குனர்களின் படங்களை தயாரித்து உதவி புரியும் ஆரோக்கியமான பழக்கம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது.
இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட இயக்குனர்கள் தங்களது உதவி இயக்குனர்களின் படங்களை தயாரித்தது, வெளியிட்டது அப்படங்களின் வெற்றிக்கு பக்கபலமாய் இருந்தது.

இந்த வரிசையில் ‘பிசாசு’ படத்தின் வெற்றி தந்த சந்தோஷத்தில் இருக்கும் இயக்குனர் மிஷ்கினும் இணைந்துள்ளார். தனது நெடுநாள் சிஷ்யர் வடிவேல் இயக்கும் ‘கள்ளப்படம்’ என்ற படத்தை 'லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ்' சார்பில் வெளியிடுகிறார். நல்ல தரமான படைப்புகளுக்கு துணை நிற்க ஆயத்தமாகி வரும் லோன் உல்ப் புரொடக்ஷன்சின் முதல் வெளியீடாக வருகிறது ‘கள்ளப்படம்'.

இதுகுறித்து மிஸ்கின் கூறும்போது, நான் இந்த படத்தை பார்த்தேன். என்னை பொறுத்தவரையில் இப்படம் தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் இடம்பெறும். வடிவேல் எனது சிஷ்யன் என்று கூறி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின், வடிவேல் ஆகியோரது இந்த கூட்டணி நம்பிக்கையின் அச்சாணியாய் விளங்குகிறது. சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் ஒரு விருந்தாய் அமையும் என்று கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions