'கள்ளப்படம்' டிரைலரின் ஆரம்பக் காட்சியில் ரஜினி, கமல்

Bookmark and Share

'கள்ளப்படம்'  டிரைலரின் ஆரம்பக் காட்சியில் ரஜினி, கமல்

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் J வடிவேல் நடித்து இயக்கும் படம் கள்ளப்படம் விரைவில் வெளியாக தயாராகி வருகிறது. லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர்  கே, ஒளிப்பதிவாளர்  ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின்,இயக்குனர் வடிவேல் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது.

டிரைலரின் ஆரம்பக் காட்சியில் ரஜினி, கமல் ஆகியோர் நடிக்கும் படத்தில் வேலை செய்வது போல் என்று கனவு காணும் நான்கு இளைஞர்களை காண்பிக்கிறது.

சினிமாவில் சாதிக்க துடிக்கும் நான்கு இளைஞர்களின் ரசிகர்களின் கதை என்று ரசிகர்களின் மத்தியில் ஆவலை தூண்டுகிற வண்ணம் அமைந்துள்ளது இட்டிரைலர்.
“ கோடம்பாக்கத்தில் சினிமா கனவுடன் உலவும் பலருக்கு திரை ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஆகியோரின் படத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும்.

அப்படிப்பட்ட நான்கு பேரின் கதைதான் ‘கள்ளப்படம்’. சினிமா வெற்றிபெருபவர்களை மட்டும்தான் கொண்டாடும். அந்த வெற்றிக்கு ஒவ்வொரு தனி நபரும் கடந்த வந்த பாதையை எவரும் பார்ப்பதில்லை.

ஒவ்வொரு கலைஞனும் தன் எதிர்காலத்துக்கான கனவை ஒரு புள்ளியில் நிறுத்தியாக வேண்டியிருக்கிறது. அங்கிருந்து அவன் எதிர்கொள்ளும் விஷயங்களின் கோர்வையே ‘ கள்ளப்படம்’.” என்கிறார் இயக்குனர் J வடிவேல்.   


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions