கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது கமலஹாசன் பேச்சு

Bookmark and Share

 கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது கமலஹாசன் பேச்சு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தந்தை சாம்பமூர்த்தி தியாகராஜ கீர்த்தனையை பாடி அறிமுகப்படுத்தியவர்.

இவருக்கு நெல்லூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா கஸ்தூரிபாய் கலாசேத்ராவில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தாய் சகுந்தலம்மா இச்சிலையை திறந்து வைத்தார்.

இவ்விழாவில் மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு, இயக்குனர் விசுவநாதன், நடிகர் கமலஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

விழாவில் பேசிய நடிகர் கமலஹாசன், “இசை மேதை சாம்பமூர்த்தி அதிகம் படிக்காதவர். ஆனால் தியாகராஜ கீர்த்தனை அவரால்தான் பிரபலமானது. அதோடு தனது வாரிசுகளை கலை பொக்கிஷமாக வழங்கி உள்ளார்.

சாம்பமூர்த்தி படிக்காவிட்டாலும் பெரும் சாதனை நிகழ்த்தி உள்ளார். அதனால் உயர் கல்வி படிக்காதவர்களை யாரும் ஏளனமாக பார்க்க கூடாது. 

நான் கூட 10–ம் வகுப்பை பாதியில் நிறுத்தியவன்தான். யாரும் கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது அவர்களுக்கு கல்வி 100 சதவீதம் கிடைக்க வேண்டும். தெலுங்கு திரையுலகில் நான் பெற்ற வெற்றிக்கு பின்னால் எஸ்.பி.பி. அவர்கள் உள்ளார்” இவ்வாறு அவர் பேசினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions