மொரீஷியஸ் தீவில் கமல்

Bookmark and Share

மொரீஷியஸ் தீவில் கமல்

விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் என 3 படங்களில் நடிக்கும் கமல்ஹாசன் அப்படங்களின் இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக இருக்கிறார். ‘விஸ்வரூபம் 2' ஷூட்டிங்கின் இறுதி தருவாயில் ‘உத்தம வில்லன்‘ படத்தில் நடிக்க தொடங்கிய கமல், இரு படங்களையும் முற்றிலுமாக முடித்திருக்கிறார். ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஹாட்ரிக் விருந்து தரும் வகையில் மலையாள திரிஷ்யம் பட ரீமேக்கான 'பாபநாசம்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது ‘உத்தமவில்லன்‘ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கமலின் ராஜ்கமல், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. ஏப்ரல் 2ம் தேதி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக மார்ச் 1ம் தேதி ஆடியோ வெளியாகிறது.

இதையடுத்து பாபநாசம் படமும், பின்னர் விஸ்வரூபம் 2ம் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடக்கிறது. தற்போது தனது புதிய படத்துக்கான பணிகளை ஜரூராக தொடங்கி இருக்கிறார் கமல்.

இதுபற்றி கமல்ஹாசன், தனது உலகநாயகன் யூடியூப் இணைய தள பக்கத்தில், தற்போது மொரீஷியஸ் தீவில் அடுத்த படத்துக்கான லொகேஷன் தேர்வு செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions