கமல் பட தலைப்பு ஜெயம் ரவிக்கு வெற்றி கொடுக்குமா?

Bookmark and Share

கமல் பட தலைப்பு ஜெயம் ரவிக்கு வெற்றி கொடுக்குமா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது தமிழ் படங்களில் இடம்பெறும் தலைப்புகள் பெரும்பாலும் படங்களில் இடம்பெற்ற வசனங்களை கொண்டோ, அல்லது பழைய படங்களின் தலைப்பையோ வைக்கும் அளவுக்கு தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. 

அந்த வரிசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிச்சட்டை’ படம் 80-களில் கமல் நடித்து வெளிவந்த படத்தின் தலைப்புதான். அதேபோல், விஷால் தற்போது நடித்து வரும் ‘பாயும் புலி’ படத்தின் தலைப்பும், ரஜினி நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த படத்தின் தலைப்புதான். 

இந்த பழைய படங்களின் தலைப்பு மோகம் தற்போது ஜெயம் ரவியையும் தொற்றிக்கொண்டுள்ளது. அதன்படி, சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்திருக்கும் ‘அப்பாடக்கர்’ படத்திற்கு கமல் நடிப்பில் 80-களில் வெளிவந்த ‘சகலகலா வல்லவன்’ என தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல் நடிப்பில் ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த ‘சகலகலா வல்லவன்’ படம் ஹிட்டான பிறகுதான் கமல் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்தார். கமலுக்கு இந்த தலைப்பு கொடுத்த மிகப்பெரிய வெற்றி, ஜெயம் ரவிக்கும் கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions