என்னிடமிருந்து கமல் நிறைய எதிர்பார்க்கிறார்! -இசையமைப்பாளர் ஜிப்ரான்

Bookmark and Share

என்னிடமிருந்து கமல் நிறைய எதிர்பார்க்கிறார்! -இசையமைப்பாளர் ஜிப்ரான்

களவாணி டைரக்டர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அந்த படத்தில் அவர் வித்தியாசமான இசையை கொடுத்திருந்தார். அதோடு பாடல்களும் ஹிட்டானதால் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்காரணமாக அடுத்தடுத்து வத்திக்குச்சி, குட்டிப்புலி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்கா, அமரகாவியம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர், கமலின் விஸ்வரூபம்-2, உத்தம வில்லன் படங்களுக்கும் இசையமைத்தார். அதைத் தொடர்ந்து இப்போது கமலின் பாபநாசம் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் வித்தியாசமான இசைக்கருவிகளைக்கொண்டு ஒரு புதுமையான டோனை கொடுத்திருக்கிறாராம் ஜிப்ரான்.
அதோடு படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களையுமே வித்தியாசமாக ட்ரைவ் பண்ணியிருப்பதாக கூறும் அவர், இந்த பாபநாசம் படத்தைப்பொறுத்தவரை குடும்ப பின்னணியில் உருவான செண்டிமென்ட் கதை என்பதால் பின்னணி இசைக்கு பெரிய ஸ்கோர் இருந்தது.
அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறேன். அதோடு கமல் சார் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பதால் படத்துக்குப்படம் எனது கூடுதல் இசைத்திறமையை வெளிப்படுத்த முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ஜிப்ரான்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions