தேர்தல் வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லையே: கமல் வருத்தம்!

Bookmark and Share

தேர்தல் வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லையே: கமல் வருத்தம்!

வாக்காளர் பட்டியிலில் என் பெயர் இல்லை என்று கூறிவிட்டார்கள் என உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதி ஹாஸனுடன் சேர்ந்து முதன்முதலாக நடிக்க உள்ளார்.

அந்த படத்திற்கு சபாஷ் நாயுடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வரும் மே மாதம் 16ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்கப் போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

என் புதிய படத்தின் படப்பிடிப்பு தேர்தல் நடக்கும் அதே மே 16ம் தேதி துவங்குகிறது. அதனால் நான் படப்பிடிப்புக்கு சென்றுவிடுவேன். தேர்தலில் வாக்களிக்க மாட்டேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு சென்றேன்.

அங்கு என்னவென்றால் என் வாக்கை யாரோ போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். இந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தான் இருந்தேன்.

ஆனால் வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று கூறிவிட்டார்கள். தேர்தல் ஆணைய அதிகாரி என் நெருங்கிய நண்பராக இருந்தும் இப்படி உள்ளது என்றார்.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions