காவ்யா மாதவனை அசத்திய டூப்ளிகேட் கமல்..!

Bookmark and Share

காவ்யா மாதவனை அசத்திய டூப்ளிகேட் கமல்..!

'ஷி டாக்ஸி' படத்தை முடித்துவிட்ட காவ்யா மாதவன் இப்போது 'ஆகாசவாணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் எட்டுமாத கர்ப்பிணியாகவும் துணிந்து நடிக்கிறார் காவ்யா. அவரது கணவராக நடிகர் விஜய்பாபு நடிக்கிறார்.

கணவன் மனைவிக்கு இடையே வேலைபார்ப்பது சம்பந்தமாக ஏற்படும் ஈகோ தான் கதைக்களம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது காவ்யா மாதவன் ஆச்சர்யப்படும்படியான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.

இந்தப்படத்தின்  கிரேன் ஆபரேட்டராக பணியாற்றியும் ஹைதராபாத்த்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தான் காவ்யா மாதவனை ஆச்சர்யப்படுத்தியவர். காரணம் ஸ்ரீதரின் உயரம் 7 அடி 4 அங்குலம்.. தசாவாதாரம் படத்தில் முஸ்லீம் இளைஞனாக உயரமான கமல் ஒருவர் வருவாரே, அவருக்கு டூப்பாக நடித்ததும் இவர்தான்.

எவ்வளவு உயரமாக இருந்தாலும் காவ்யா மாதவன் ஏதாவது கேட்டால் அவரிடம் தலை குனிந்து மரியாதையாக பேசுவாராம் இந்த ஸ்ரீதர். 'ஆகாசவாணி' ஷூட்டிங் மூலம் ஆகாச உயரத்தில் எனக்கு கிடைத்த நல்ல நண்பன்” என இந்த உயர மனிதனை பாராட்டுகிறார் காவ்யா மாதவன். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions