கமலின் முத்த சாதனையை முறியடித்த அஜித் ரசிகர்!

Bookmark and Share

கமலின் முத்த சாதனையை முறியடித்த அஜித் ரசிகர்!

‘லொள்ளு சபா’ என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஜீவா. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் அறிமுகமாகிறார். 

அஜித்தின் தீவிர ரசிகரான இவர், அறிமுகமாகும் முதல் படத்தின் தலைப்பே அஜித் படங்களின் தலைப்பை இணைத்து வைத்துள்ளார். அஜித் நடித்த ‘ஆரம்பம்’, ‘அட்டகாசம்’ ஆகிய படங்களை இணைத்து இப்படத்திற்கு ‘ஆரம்பமே அட்டகாசம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தின் நாயகியாக கன்னடத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்த சங்கீதா பட் என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும், பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுரி, ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ரங்கா என்பவர் இயக்குகிறார். இவர் இயக்கத்தில் ஏற்கெனவே ‘நாய்குட்டி’ என்ற படம் தயாராகி இன்னும் வெளிவராமல் இருக்கிறது. 

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக தயாராகும் இப்படத்தில் கமலின் முத்த சாதனையை லொள்ளு சபா ஜீவா முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக தமிழ் ஹீரோக்களில் கமல்ஹாசன் தான் முத்த மன்னன் என்று சொல்வார்கள். கமலின் படத்தில் கண்டிப்பாக ஒரு லிப் லாக் முத்தக்காட்சி இடம்பெறும். ஆனால் ஜீவா நடிக்கும் இந்த படத்தில் மட்டும் மொத்தம் பத்து லிப் லாக் காட்சிகள் இடம்பெறுகிறதாம். அந்த வகையில் லிப் லாக்கில் கமலின் சாதனையை ஒரே படத்தில் ஜீவா முறியடித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். 


Post your comment





Related News
எங்களையும் மதிக்கிறது கமல், அஜித் தான் - லைட்மேன் கூறும் உண்மைத்தகவல்
தீபாவளிக்கு மோதிக் கொள்ளும் கமல் - அஜீத்
நடிகர் – நடிகைகள் போராட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
மூன்று மாஜி நடிகைகளுக்கு ஒரு இளம் நடிகர் ஹீரோவா?
கமலுடன் அஜீத் கூட்டணி சாத்தியப்படுமா?
தமிழ் முன்ன‌னி நடிகர்களின் சம்பள பட்டியல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions