நாங்கள் ஆஸ்கார் வாங்கி விட்டதாய் உணர்கிறோம்- ஆஸ்கார் நாயகன் க்ரெய்க் மேனுக்கு கமல் வாழ்த்து

Bookmark and Share

நாங்கள் ஆஸ்கார் வாங்கி விட்டதாய் உணர்கிறோம்- ஆஸ்கார் நாயகன் க்ரெய்க் மேனுக்கு கமல் வாழ்த்து

நல்ல கலைஞன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரைத் தேடிப் பிடித்து தன் படத்தில் வேலை செய்ய வைக்கும் மகா கலைஞன் கமல், சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற க்ரெய்க் மேனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு க்ரெய்க் மேன் சவுண்ட் மிக்சிங் செய்துள்ளார்.

‘ஜாஸ்’ இசை கற்கும் முதல் வருட மாணவனின் இசை வெறியைப் பற்றிய திரைப்படம் ‘விப்லாஷ்’. இசையைப் பற்றிய ஒரு திரைப்படத்திற்கு, இசையமைப்பாளரின் பணி எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதை விட முக்கியமானது ஒரு சவுண்ட் மிக்சிங் கலைஞரின் பணி. இத்திரைப்படத்தில் வரும் துல்லியமான, அதிர்வூட்டும் ட்ரம்ஸ் இசைக்குச் சொந்தக்காரர் கனடாவை சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணரான க்ரெய்க் மேன்.

சிறந்த திரைப்படம் உட்பட ஐந்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘விப்லாஷ்’.  சிறந்த துணை நடிகர், சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்சிங் என்று மூன்று ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. வெற்றிக் களிப்பில் ஆஸ்கார் மேடையேறிய க்ரெய்க் மேன் தனக்கான விருதைப் பெற்றார்.

இந்நிலையில் க்ரெய்க் மேனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கமல் “ க்ரெய்குக்காக நாங்கள் பெருமைப் படுகிறோம். அவரது சிறப்பான பணிக்கு ஆஸ்கார் விருது மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் பணியாற்றிய போது அவரது சக்தி வாய்ந்த ஆளுமையும், பொறுமையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ‘விப்லாஷ்’ படத்திற்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் நாங்கள் அதில் பணியாற்றியதைப் போலவும் நாங்களே ஆஸ்கார் வாங்கி விட்டதைப் போலவும் உணர்கிறோம். க்ரெய்க் மற்றும் அவருடைய குழுவிற்கும் எங்களது வாழ்த்துக்கள்.” என்றார்.

உத்தமவில்லன் திரைப்படத்திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தற்போது, க்ரெய்க் மேனால் அந்த எதிர்பார்ப்பு மேலும் கூடியிருக்கிறது. 


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்“
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions