கமலின் சாதனைக்கு கிடைத்த புதிய விருது!

Bookmark and Share

கமலின் சாதனைக்கு கிடைத்த புதிய விருது!

கமலின் நடிப்புக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாது, திரைத்துறையை சேர்ந்த பல துறைகளிலும் இவரது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இந்திய சினிமாவை உலகளவில் இடம் பெற செய்தவர்களில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

இந்நிலையில் இந்திய சினிமாவுக்கு கமல் செய்த பெரும் பங்களிப்பிற்காக பாரிஸ் நாடு ஹென்றி லாங்லாய்ஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

விருது குறித்து கமல் கூறும் போது, ‘பாரிஸில் ஹென்றி லாங்லாய்ஸ் விருதைப் பெற்றுள்ளேன். இந்த விருதை நான் பெறும்போது என் குரு அனந்து சார் இருந்திருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். காரணம் அவர்தான் ஹென்றி லாங்லாய்ஸ் என்ற பெயரையே எனக்கு தெரியப்படுத்தியவர்” என்று கூறினார்.

ஹென்றி லாங்லாய்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டின் பிரபலமான சினிமா வரலாற்று ஆசிரியர். மேலும் இவர் ஒரு திரைப்பட ஆவணத் தொகுப்பாளரும் கூட.

இவர் 1977ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். எனவே அவரது பெயரில் சினிமா சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions