போலீஸ் வேடத்தில் கமல்!

Bookmark and Share

போலீஸ் வேடத்தில் கமல்!

அஜீத், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்கள் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து வரும் நிலையில், 2015ம் ஆண்டு மட்டும் கமல் நடிப்பில் 4 படங்கள் திரைக்கு வருகிறது. அதாவது, இன்று உத்தமவில்லன் வெளியாகிறது.

இதையடுத்து த்ரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், விரைவில் இறுதிகட்ட பணிகள் முடிந்து அப்படமும் திரைக்கு வந்து விடும்.

அதோடு, ஏற்கனவே அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து திரைக்கு வரத்தயார் நிலையில் இருக்கும் விஸ்வரூபம்-2வும் சில மாதங்களில் திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.

ஆக இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் நிலையில் உள்ளன. இந்தநிலையில், அடுத்தபடியாக கமல் நடிக்கவிருக்கும் ஓர் இரவில் படவேலைகளும் விரைவில் தொடங்குகிறது.

மன்மதன் அம்புவிற்கு பிறகு கமலுடன் த்ரிஷா ஜோடி சேரும் இந்த படத்தில் வேட்டையாடு விளையாடுவிற்கு பிறகு போலீஸ் ரோலில் நடிக்கிறார் கமல். இதற்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து ஸ்லிம்மாகப்போகிறாராம்.

மேலும், இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் கமல். ஆக, இந்த ஆண்டு மட்டும் கமல் நடிப்பில் 4 படங்கள் திரைக்கு வந்து சாதனை படைக்கப்போகிறது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions