எவனென்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய்? தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத நாள்

Bookmark and Share

எவனென்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய்? தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத நாள்

கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். அவருடைய படங்கள் எப்போது வரும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கமல் மட்டுமில்லை இந்திய சினிமாவே இன்றைய நாளை மறக்கக்கூடாது, தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்து செல்லும் முயற்சிகளை எப்போதும் கமல் எடுத்து வருகிறார்.

அப்படித்தான் விஸ்வரூபம் என்ற பிரமாண்ட படைப்பை இயக்கி நடித்தார், ஆனால், ஒரு சில சதி வேலைகளால் இப்படம் சொன்ன தேதியில் வெளிவரவில்லை.

கமலின் சொந்த மாநிலமான தமிழகத்தில் படம் வரவில்லை, ஆனால், உலகம் முழுவதும் படம் ரிலிஸாகியது.

தமிழ் ரசிகர்கள் அனைவரும் திரையரங்கு வரை வந்து சோகத்துடன் திரும்பி சென்றனர், அந்த நேரத்தில் கூட கமல்ஹாசன் ‘என் மீது மரியாதை வைத்திருந்தால், எந்த ஒரு அசம்பாவிதமும் செய்யாமல் வீட்டிற்கு செல்லுங்கள்’ என்றார்.

வார்த்தைகளில் கூட அஹிம்சை போதிக்கும் கமலா படத்தின் மூலம் வன்முறையை தூண்டுவார்?. படம் பல பிரச்சனைகளை தாண்டி பிப்ரவரி 7ம் தேதி வெளிவந்தது.

படத்தின் திருட்டு விசிடிக்கள் உலா வந்து ஒரு வாரம் ஆனது, ஆனால், எந்த ஒரு தமிழ சினிமா ரசிகனும் அதை திருட்டுவிசிடியில் பார்க்காமல் திரையரங்கு வந்து பார்த்து ரசித்தான்.

படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு சாதனையை படைத்தது. தமிழ் சினிமாவும் வேறு தளத்திற்கு சென்றது. விஸ்வரூபம் வெளிவந்து இன்றுடன் 4 வருடங்கள் நிறைவடைகின்றது, வேறு என்ன கேட்கின்றோம், விஸ்வரூபம்-2ம் பாகம் எப்போது உலக நாயகரே? என்பது தான் ரசிகர்களின் ஒரே கேள்வி.


Post your comment





Related News
பூச்சிகளை சாப்பிடப்போகிறீர்கள்! கமல் எச்சரிக்கை
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் இதோ
சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்
எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்
4 நாட்களில் ரஜினியின் சாதனையை முறியடித்த கமல்ஹாசன், இன்றும் தொடரும் போட்டி
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 அரசியல்வாதிகள் 2 கிரிக்கெட் வீரர்கள்
இந்த ஆண்டு அக்டோபரில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்
மதுரை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் புதிய மனு தாக்கல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions