கலாபவன் மணி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

Bookmark and Share

கலாபவன் மணி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி நேற்று கொச்சியில் காலமானார். நுரையீரல் பிரச்சினையால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த கலாபவன் மணி, நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். 

அவரது மறைவுக்கு மலையாளம் மற்றும் அனைத்து திரையுலகை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமலும் கலாபவன் மணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய நண்பர் கலாபவன் மணியின் மணியின் மறைவு எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நுரையீரல் பிரச்சினையால் மேலும் ஒரு என்னுடைய மலையாள சகோதரர் இறந்து போயிருப்பது வேதனையை தருகிறது. அவருக்கு நிறைய திறமை இருந்தது, ஆனால் வாழ்வதற்கு நேரம் போதவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

கமலுக்கு மலையாள திரையுலகுடன் ஒரு பெரிய நெருக்கமுண்டு. மலையாள நடிகர்கள் பலரையும் தன் படங்களில் அவர் அதிகம் பயன்படுத்தியுள்ளார். 

அந்த வரிசையில் கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த ‘பாபநாசம்’ படத்திலும் கலாபவன் மணி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். கலாபவன் மணி எத்தனையோ தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், கமலுடன் இணைந்து நடித்தது இந்த ஒரு படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions