பிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சு

Bookmark and Share

பிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சு

நடிகர் கமல்ஹாசன் அவரது 62-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நடிகர் கமல்ஹாசன் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருந்தததாவத, நாளை என்பது மற்றொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரம் இங்கே. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். வேளை வரும் என காத்திருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம் என பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய கமல், மழை நேரங்களில் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீரை அரசு அகற்றிவருவதால் மருத்துவ முகாமை நடத்துவதாக கமல் தெரிவித்துள்ளார். மருத்துவ முகமாமை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகமாமுக்கும் அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லை. 

எங்களது அரசியல் பணிகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. கனவுகளில் இருந்து தான் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. எனவே எங்களுடைய முயற்சிகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கரணையில் மழைபாதித்த பகுதிகளை பார்வையிடும் கமல், மக்களிடம் குறைகளை கேட்டறிகிறார். பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன் தனது எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment





Related News
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
சாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா? புதிய விளக்கம்
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions