ஆமீர் கானின் 'பிகே' ரீமேக்கில் கமல் ஹாஸன்!

Bookmark and Share

ஆமீர் கானின் 'பிகே' ரீமேக்கில் கமல் ஹாஸன்!

ஆமீர் கான் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற பீகே படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஆமீர் கான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீகே. ரூ 600 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்தியிலேயே வெளியாகி, இன்னமும் சில இடங்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது.இந்தப் படத்தின் தமிழ் - தெலுங்கு ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே கமல் ஹாஸனை நாயகனாக வைத்து படத்தை உருவாக்க உள்ளனர். இயக்குநர், ஹீரோயின் என முக்கிய விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை.

ஆனால் ஹீரோ விஷயத்தில் கமல் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவருடன் பேசி வருகிறார்கள். கமலும் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions